பாலைவனச் சோலை
-----------------------------------------
பாலைவனம் சோலை வனமானது அரபு நாட்டில்,
தண்ணீரால் அல்ல , எரிபொருளால் ,
சோலை வனம் பாலைவனமானது நம்நாட்டில் ,
மணலால் அல்ல , விவசாயியின் கண்ணீரால் !
மானியத்தில் அரசு தரவேண்டும் , விதைநெல் ,
இடைத் தரகர் கொள்ளை , வேண்டும் நேரடி கொள்முதல்,
தடையில்லா மின்சாரம், விளைச்சலுக்கு மதிப்பீடு !
விளைநிலங்களை துண்டுபோடுவோர் தண்டிக்கப்படவேண்டும்.
நாளொரு மேனி ,விவசாயி தற்கொலை !
கவலை கொள்வோர் , கண்டுகொள்வோர் யாருமில்லை ,
நாட்டின் முதுகெலும்பு விவசாயி ! எவன் சொன்னான் ?
முதுகெலும்பு இல்லா நாடு நி(ற்க)லைக்க முடியுமா ?
அரசே வேண்டாம் இந்த விஷப்பரீட்சை !
உடன் தேவை ,முதுகெலும்பு அறுவை சிகிச்சை /
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக