ஞாயிறு, 18 டிசம்பர், 2011

பெரியாறு அணை வரலாறு

பெரியாறு அணை வரலாறு*

பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி, மேற்கு நோக்கி கேரளாவில்
பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில்
அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் அணை தமிழகத்திற்கும் உரியது.
தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது.
மதுரை நாடு என்பது மதுரை மாவட்டம், திருச்சி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம்,
நெல்லை மாவட்டங்களும், தென்திருவாங்கூர் பகுதியும் அடங்கும். 1529 முதல் 1564
வரை விஸ்வநாத நாயக்கர் ஆட்சி செய்தார்.
1572 வரை முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1595 வரை வீரப்ப நாயக்கரும் ஆட்சி
செய்தனர். 1601 வரை இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1623 வரை முத்துவீரப்ப
நாயக்கரும், 1659 வரை திருமலை நாயக்கரும் ஆட்சி செய்தனர். திருமலை நாயக்கர்
முதல் இராணி மங்கம்மாள் ஆட்சி வரை ஒவ்வொரு காலகட்டத்தில் திருவாங்கூர்
ராஜாக்கள் வரி செலுத்த மறுத்தனர்.
பின் போரில் தோல்வியுற்று வரி செலுத்தினர்.1790 மார்ச் 6ல் மதுரை மாவட்டம்
உதயமானது. ஏப்.5ல் முதல் கலெக்டராக ஏ. மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல்
இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி
தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.
இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு
தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும்
இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை
நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
1807ல் மதுரை கலெக்டர் *ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று
பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட
பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார்.
ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார்.
1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும்
பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம்
கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1867ல் மேஜர்
ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான் முக்கிய நோக்கம் என்று 17.50
லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி
மலையின் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்த
பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து
அந்தப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்தது. பெரியாற்றின் குறுக்கே மண்
அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத்
திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு
தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால்
இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம்
ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த
அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.
ஆங்கிலேய அரசின் ஆணைப்படி மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் 1882-ல் அணையைக்
கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இத்திட்டத்தின்படி ஆற்றின்
அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும்
அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட
முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும்
தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும்
இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம்
109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி
மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி
வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி
ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.
பெரியாறு திட்டத்தின் கீழ், சென்னை மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பும் வகையில்
திருவாங்கூர் மகாராஜாவுக்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையே 1.1.1886 முதல்
999 ஆண்டுகளுக்கான பெரியாறு குத்தகை உடன்படிக்கை, 29.10.1886 அன்று ஏற்பட்டது.
(அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்ததால் அதனுடன் இடம்,
லாபப்பங்கீடு போன்றவைகளுக்கான பேச்சு வார்த்தை நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு
1886 ஆம் ஆண்டு அக்டோ பர் 26 ஆம் தேதியில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இதன்படி திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு (தற்போதைய கேரளா) சென்னை மாகாணம்
(தற்போதைய தமிழ்நாடு) அணையின் 155 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கும்
பகுதியான 8000 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணைகட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக
100 ஏக்கர் சேர்த்து 8100 ஏக்கருக்கு குத்தகைப் பணம் செலுத்த வேண்டும் என்பது
உட்பட 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழகம்
குத்தகைத் தொகையாக 1896ல் இருந்து 1970 வரை ஏக்கருக்கு 5 ரூபாய் என்று
கொடுத்து வந்தது. கேரளம், 1970 ஆம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி,
ஆண்டிற்கு 5 ரூபாய் என்றிருந்த குத்தகைத்தொகையை 30 என மாற்றி, அணையிலும் அதைச்
சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன்
பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது.
இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது.
இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப்
படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது.)
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர்
கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு
என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு
அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள
நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான
திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார்.
எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோ பர்
11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில்
அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக்
தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை
மேற்கொண்டது.
அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை,
திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள்
பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த
மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.
அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த
நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன்
குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு
வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி,
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி
நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.
பெரியாறு அணை புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் 1886லிருந்து 1895 வரையிலான
ஆண்டுகளில், சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கல்லில் கட்டப்பட்டதாகும்.
பொதுவாகவே, புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்படும் அணைகள் நீர்
அழுத்தம், அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை
போன்றவற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தவை. எனவே தான்,
புவி ஈர்ப்பு அடிப்படையில் கட்டப்பட்ட பெரியாறு அணை இன்றளவும் உறுதியாகவும்,
வலிமை மிக்கதாகவும் விளங்குகிறது.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 5 ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில், சுமார் 8,000
ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. இந்த அணையின் நீர் மூலம், தேனி,
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள சுமார்
2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந் நிலையில், 29.5.1970 அன்று கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே இரண்டு
துணை ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அதாவது, 1) 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குத்தகை
வாடகை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், ஒரு ஏக்கருக்கான,
ஆண்டு குத்தகை வாடகையை 5 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்துதல், மற்றும்
மீன்பிடி உரிமையை கேரளாவிற்கு விட்டுக் கொடுத்தல் ஆகியவை அடங்கிய ஓர்
ஒப்பந்தமும்,
2) மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப கட்டணம் செலுத்துவதன் அடிப்படையில், புனல்
மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள தமிழ்நாட்டை அனுமதிப்பது என்கிற மற்றொரு
ஒப்பந்தமும் ஏற்பட்டன.
இந்த இரண்டு ஒப்பந்தங்களும், 1886ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அசல்
உடன்படிக்கையின் உரிமையாளர் என்ற முறையில் ஏற்படுத்தப்பட்டன.
பழைய அணையில், அணையின் முன் மற்றும் பின் பக்க பகுதிகள் சுண்ணாம்பு சுர்க்கி
கலவையால் கருங்கற்கள், அதாவது, stone masonry with lime surkhi mortar கொண்டு
கட்டப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், அணையின் மையப் பகுதி சுண்ணாம்பு சுர்க்கி
திண்காரையால், அதாவது, lime surkhi concrete-ஆல் கட்டப்பட்டது.
குறுகிய கால திட்டமாக, அணையின் எடையை அதிகரிக்கும் பொருட்டு, 21 அடி
அகலத்திற்கு, மூன்று அடி பருமன் கொண்ட ஆர்.சி.சி. கட்டுமானப் பணி அணையின் முழு
நீளத்திற்கு அதன் மேல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, அணையின்
எடை ஒரு மீட்டருக்கு 35 டன் அதிகரித்துள்ளது. அதாவது, அதன் கட்டமைப்புடன்
மொத்தம் 12,000 டன் எடை கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது. நடுத்தர கால
நடவடிக்கையாக, இறுக்கு விசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில், அணையின்
அடித்தளத்துடன் எஃகு கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளன. அணையின் முன்
பகுதியிலிருந்து 5 அடி தொலைவில், அணையின் மேற்பரப்பிலிருந்து, அடித்தளப்
பாறையில் 30 அடி வரை, 9 அடி இடைவெளியில், 4 அங்குலம் குறுக்களவில், துளைகள்
அணையின் முழு நீளத்திற்கும் போடப்பட்டுள்ளன.
இந்த துளைகளுக்குள், 7 மி.மீ. பருமன் கொண்ட மிக வலுவான 34 எஃகு கம்பிகள்
பொருத்தப்பட்டுள்ளன. அஸ்திவாரத்தில் உள்ள கருங்கல் பாறைகளுடன், இந்த கம்பிகள்
உறுதியாக பொருத்தப்பட்டுள்ளன. முதலில் 20 அடி ஆழத்திற்கு திண்காரைக் கட்டுகள்,
அதாவது, Concrete போடப்பட்ட பிறகு கம்பிகள் செலுத்தப்பட்டு
நிறுத்தப்பட்டுள்ளன. 120 டன் சக்தி கொண்ட இக்கம்பிகள், மேற்பரப்பிலிருந்து
இழுத்துக் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், துளையை அடைக்கும் வகையில்,
சிமிட்டிக் கலவை போடப்பட்டு மேற்பரப்பு மூடப்பட்டது. இதன் காரணமாக, அஸ்திவார
பாறைகளுடன் 120 டன் விசை கொண்டு, அணையை வலுவாக இறுக்குக் கம்பிகள் பிடித்துக்
கொள்ளும். நில அதிர்வு உட்பட பல்வேறு விசைகளைத் தாங்கிக் கொள்ளும் வகையில்,
அணையின் முழு நீளத்திற்கும், 9 அடி இடைவெளியில், 95 கம்பிகள் செலுத்தப்பட்டு
சிமிட்டிக் கலவை போடப்பட்டு இருக்கிறது.
நீண்ட கால நடவடிக்கையாக, அணையின் பின்புறத்தில் 10 அடி ஆழம், 32 அடி
அகலத்திற்கு, தரை மட்டத்திலிருந்து 145 அடி உயரத்திற்கு ஆர்.சி.சி. கட்டுமானம்
அணையின் தலைப் பகுதியுடன் இணையும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்போதுள்ள அணை மற்றும் புதிய கட்டுமானம் ஆகியவை
ஒரே அணை போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இந்தப் புதிய வடிவம் பெரியாறு அணைக்கு கொடுக்கப்பட்டபின்
முல்லைப்பெரியாறு
அணை என்ற பெயரால் அழைக்கப்பட்டது. முல்லை ஆறு மற்றும்பெரியாற்றுக்கு
குறுக்கே கட்டப்பட்டிருப்பதால் "முல்லைப்பெரியாறு அணை" என்று அழைப்பது
1970களில் இருந்து துவங்கியதாக கருதப்படுகிறது.

------------------------
இன்று அன்றாடம் ஊடகங்களை ஆக்கிரமிக்கும் பிரச்சினையாக முல்லைப்பெரியாறு அணை விவகாரம்
உருவெடுத்துள்ளது.
தமிழக ? கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியே நாடாளுமன்ற வளாகத்தின் முன்பே அட்ந
டகளை கையிலேந்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும், தர்ணா போராட்டங்கள் செய்வதும்,
அரசியல் தலைவர்கள் ஆய்வு செய்வதாகக் கூறி அணையைச் சுற்றி வருவதும்,
மத்திய அமைச்சர்களே பிரதமரை சந்தித்து கோரிக்கைகள் வைப்பதும் இன்று தொடர்கதையாகி விட்
டது.
கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், எதிர்க்கட்சியான இடதுசா
ரி கூட்டணியும் ஒருமுகமாக இப் பிரச்சினையை சந்திக்க -
தமிழக அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் பாராமுக மாக தனித்தனியே பிரச்சினையை கையி
லெடுக்க உண்ணாவிரதம், முற்றுகைப் போராட்டம், சாலை மறியல் என விவகாரம் வி
ஸ்வரூபமெடுத்துள்ளது.
இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் `பந்த்? ந
டத்த ? போட்டிக்கு தமிழக பகுதிகளில் பெரியார் தி.க. உள்ளிட்ட தமிழர் அமைப்புக்கள் கேரள வாக
னங்களை மறிக்க ? கேரளாவில் வாழும் தமிழர்களும், தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகளும் என்ன நட
க்குமோ என நடுங்கிப் போய் உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணைக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் அது எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என
யூகிக்க முடியாது; எனவே, கடற்படை தயார் நிலையில் இருப்பதாக துணை அட்மிரல் கே.என். அதில்
குறிப்பிட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு தொல்லை ஏற்பட்டு விடுமோ? எ
ன்ற ஐயம் அனைவருக்கும் ஏற்படத் தொடங்கி விட்டது.
தினத்தந்தி நாளிதழ் 1-12-2011 அன்று எழுதிய தலையங்கத்தில், ?தென் மாநிலங்களில் இருப்பதுபோல
வலுவான உறவு வடக்கே இருக்காது. இப்போதுதான் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி என்று
ஒரு வித்தியாசமான உணர்வுகள் துளிர் விடத் தொடங்கியுள்ளன;
ஒரு தலைமுறைக்கு முன்னர் திராவிட நாடு என்று பொதுவாகத்தான் எல்லோரும் மனதில் கொண்டிருந்
தோம். தமிழ்த்தாய், கன்னட மாதா, கேரள அம்மா, தெலுங்கு தள்ளி ஆகிய 4 அன்னைகளும் சகோதரி
கள் என்ற பாசஉணர்வு டன் பெரியம்மா சித்தி பிள்ளைகளாகத்தானே காலம் காலமாக வாழ்ந்து வந்தே
஡ம்.
கேரளாவில் கடை வைத்திருக்கும் தமிழர்களை அன்போடு அண்ணாச்சி கடை என்றும், மலையாளிகள்
தமிழ்நாடு குக்கிராமங்களில் கூட வைத்து இருக்கும் டீ கடைகளை சேட்டன் கடை என்று தமிழர்களும்
அன்போடு அழைப்பர்.
இப்போது அந்த அன்பான உறவில் விரிசல் விழும் வகையில் முல்லை பெரியாறு அணை பிரச்சினை முந
ளத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையை ஒரு பிரச்சினையாக கருதும் முன்னால் அதன் வரலாற்றை
இரு மாநில மக்களும் மதிக்கவில்லையென்றால் அதை கட்டிய தியாகி பென்னிகுயிக் தியாகத்தை மறந்
தவர்களாகி விடுவோம். வரலாறு இரு மாநில மக்களையும் ஒருபோதும் மன்னிக்காது.
ஒரு ராணுவ பொறியாளராக இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி
குயிக். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் வீணாக கடலில் போய் கலக்கிறதே, இதில் ஒரு
அணை கட்டி சேமித்தால் கேரள மக்களும், தமிழக மக்களும் பயன் அடைவார்களே என்ற கருத்தில்
அணை கட்டுவதற்கான முயற்சிகளை பென்னிகுயிக் தொடங்கினார்.
இந்தத் திட்டத்திற்கு பணம் கிடையாது என்று ஆங்கிலேய அரசாங்கம் மறுத்துவிட்ட சூழ்நிலையில்
பென்னிகுயிக் தன் மனைவியின் நகை உட்பட இங்கிலாந்து நாட்டில் உள்ள தன் சொத்துக்கந
ளயெல்லாம் விற்று, அத்துடன் தம் உறவினர்களிடமே பணம் திரட்டி, அந்த மலைப்பகுதியில் கடும் கஷ்ட
ங்களை அனுபவித்து முல்லைப் பெரியாறு அணையை கட்டினார்.
இந்த அணை வலுவாக இருக்கிறது என்பது தமிழக நிபுணர்களின் வாதம், வலுவில்லை என்பது கேரளா
சொல்லும் வாதம். வாதப்படி வலுவில்லை என்றாலுமே அதை வலுவாக்க நவீன தொழில்நுட்பத்தில் எ
வ்வளவோ வழிகள் இருக்கின்றன.
116 ஆண்டுகளுக்கு முன் முல்லைப் பெரியாறு அணை கட்ட 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டு குத்தந
கக்கு தர திருவாங்கூர் சமஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதால் இந்த ஒப்பந்தம் செல்லாது எனவும், இந்த ஒப்பந்தம்
999 வருடங்களுக்கு பொருந்தும் என்றாலும் அதுவரை இந்த அணை நீடிக்காது என்பதும் கேரள அரசு
தரப்பின் வாதம்.
`அணை கட்டு பகுதியில் மீண்டும் மீண்டும் நில நடுக்கம் ஏற்படுகிறது; முல்லைப்பெரியாறு தேக்கடி,
சுருளியாறு ஆகியவற்றை ஒருங்கிணைத்த பகுதியாக உள்ளது, இப் பகுதி நிலநடுக்கம் ஏற்பட வா
ய்ப்புள்ளதாக உள்ளது; அணையை சுற்றி 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 5 ரிக்டர் அளவுக்கு மேல் நில
நடுக்கம் ஏற்பட்டால் சேதம் ஏற்படும்? ? என்பது கேரள வல்லுநர்களின் வாதம்.
முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது; அந்த அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது தமிழக
அரசின் வாதம்.
?முல்லைப்பெரியாறு அணை உடையாது; அணை உடைந்தாலும் கேரளத்தில் 4 மாவட்டங்கள் அழிந்துவி
டும் என்ற வாதம் பொய்யானது; அணை உடைந்தாலும் அந்த தண்ணீர் இடுக்கி அணைக்குதான்
செல்லும்;
முல்லைப்பெரியாறு அணை மற்ற அணை போல் மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுவது
அல்ல. மிகப் பெரிய குழாய்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வருவதாகும் என்பது தமிழக வல்லுநர்க
ளின் வாதம்.
இடுக்கி அணை முல்லைப்பெரியாறு அணையிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் 1979-ம் ஆண்டு கட்
டப்பட்ட தாகும்.
தமிழக ? கேரள எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையில் 1979-ம்
ஆண்டுக்கு முன்பு வரை 152 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. அந்த ஆண்டு இடுக்கியில் நிலநடுக்கம்
ஏற்பட்டதால் அணையின் உறுதித் தன்மை குறைந்து விட்டதாக கூறி, 136 அடியாக அது குறைக்க
ப்பட்டது. 1992-ம் ஆண்டு அணையின் நீர் மட்டம் 141.80 அடியாக உயர்ந்து வழிந்தது.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்
கொள்ள அனுமதித்ததோடு 999 ஆண்டு குத்தகை செல்லும் என உச்சநீதிமன்றம் 2006-ம் ஆண்டு பி
ப்ரவரியில் தீர்ப்பளித்தது.
இதுதொடர்பாக அரசு மற்றும் அரசியல்ரீதியான வாதப் பிரதிவாதங்களால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த்
தலைமை யில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு அமைத்து, அதில் இருமாநில அரசுகளும் தங்களின் நியா
யங்களை கூற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குழுவில் கேரளாவின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி
தாமஸ், தமிழகத்தின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி லட்சுமணன் இடம் பெற்றுள்ளனர்.
இக் குழுவின் இறுதி கட்ட கூட்டம் டிசம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளதாலும் இக் கூட்டம் முடிந்தபின்
குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்திடம் அளிக்கப்பட உள்ளதாலும் இந்த குழு எந்த முடிவும் எடுத்து
விடக்கூடாது என்ற ரீதியில் பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் அண்மையில் நடைபெற உள்ள பிரவம் தொகுதி இடைத் தேர்தலை முன்வைத்து
அங்குள்ள அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை
கையில் எடுத்துள்ளதாக வும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கேரள முதல்வர் உம்மன்சாண்டி டெல்லியில் பிரதமரை சந்தித்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்
மட்டத்தை 120 அடியாக குறைக்கவும், புதிய அணை கட்ட அனுமதிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்திற்கு பதில் எழுதியுள்ள பிரதமர் மன்மோக
ன்சிங், `முல்லைப் பெரியாறு விவாகரத்தில் மக்களிடையே தேவை யற்ற பீதியை உருவாக்கும் வகையில்
நடந்து கொள்வதும், பேசுவதும் தவிர்க்கப்பட வேண்டும்? என கேட்டுக் கொண்டுள்ளார்.
இரு மாநில உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய நீர்வளத்தை அமைச்சர்
பவன்குமார் பன்சால் அழைப்பு விடுத்துள்ளார்.
மூத்த அரசியல் தலைவரும், தி.மு.க. தலைவருமான டாக்டர் கலைஞர், `கேரள மக்களிடமும் தமிழ்நாட்டு
மக்களிடமும் எந்தவிதமான மனக்குழப்பமும் வராமல் சகோதர ஒற்றுமையோடு இருதரப்பினரும்
செயல்பட வேண்டும்; அதற்கேற்ற வழிவகைகளை நடுநிலையாக நின்று மத்திய அரசு செய்ய வேண்டும்
என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, இ.அஹமது, கே.வி. எஸ். தாமஸ் ஆகியோர் தமிழக ? கேரள எ
ம்.பி.க்களை நேரில் சந்தித்து, `முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பிரச்சினையாக்க வேண்டாம்.
சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்வோம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
முல்ந
லப் பெரியாறு அணை விவகாரம் தேசிய ஒருமைப்பாட்டிற்கு தொல்லையாகி விடக்கூடாது. தமிழக கே
ரள மக்கள் என்றும்போல் சகோதரர்களாக வாழ வேண்டும். அந்த அடிப்படையிலேயே இப் பிரச்சினைக்கு
வழி காண வேண்டும் என்பதே நமது விருப்பமும் ? வேண்டுதலுமாகும்.

---------------

வியாழன், 14 ஜூலை, 2011

PAALAI VANACH CHOLAI

                                 பாலைவனச்  சோலை
                                          -----------------------------------------

    பாலைவனம்   சோலை வனமானது   அரபு நாட்டில்,
    தண்ணீரால்  அல்ல ,  எரிபொருளால் ,
    சோலை வனம்  பாலைவனமானது  நம்நாட்டில் ,
     மணலால் அல்ல ,  விவசாயியின் கண்ணீரால் !
     மானியத்தில் அரசு தரவேண்டும் , விதைநெல் ,
     இடைத் தரகர் கொள்ளை , வேண்டும் நேரடி கொள்முதல்,
    தடையில்லா மின்சாரம், விளைச்சலுக்கு மதிப்பீடு !
    விளைநிலங்களை துண்டுபோடுவோர் தண்டிக்கப்படவேண்டும்.
    நாளொரு மேனி ,விவசாயி தற்கொலை !
   கவலை கொள்வோர் , கண்டுகொள்வோர் யாருமில்லை ,
    நாட்டின் முதுகெலும்பு விவசாயி ! எவன் சொன்னான் ?
   முதுகெலும்பு இல்லா நாடு நி(ற்க)லைக்க முடியுமா ?
   அரசே வேண்டாம்  இந்த விஷப்பரீட்சை !
 உடன் தேவை ,முதுகெலும்பு  அறுவை சிகிச்சை / 
     

செவ்வாய், 12 ஜூலை, 2011

sakkalaththi

      சக்களத்தி              ( முத்து ரத்தினம் )
                                                              -----------------      
                              
                            வினோதகன்   அலுவலகத்தில்  இருந்து கிளம்பும் போது  மணி ஒன்பது . இவனுக்கு      மட்டும்  ஏதாவது ஒரு  வேலையை  தலையில் கட்டிவிடும் மேனஜரின்  உத்தரவுக்குத்  தட்ட
    முடியாத நிலை.
 
                       நேரே  ஸ்வீட் கடைக்குச் சென்று , திருநெல்வேலி அல்வா அரை கிலோ இரண்டு பாக்கெட்டுகளும் , மைசூர் பாகு  மற்றும் காரம் இரண்டிரண்டு  பாக்கெட்டுகளாகவும்  கட்டச் செய்தான் .
  
                          பூக்கடைக்குச் சென்று இரண்டிரண்டு முழமாக , நான்கு முழம்  மல்லிகைப் பூவும் வாங்கிக் கொண்டான் . பக்கத்துக்கு ஓட்டலில்  டிபனும் முடித்துக் கொண்டான் .
 
                         எதற்கு இரண்டு பாக்கெட்டுகளாக வாங்குகிறான் என யோசிக்கிறிர்களா ? சற்று பொறுங்கள் .!
 
            ஆறு வருடங்களுக்கு முன் மேட்டுரிலுள்ள  கெமிகல்ஸ் கம்பெனியில் கிளார்க்காக வேலைக்குச்  சேர்ந்தான் , வினோதகன் .
 
            ஒரு வருடத்திலேயே பணி நிரந்தரம் செய்தது , அவன் கம்பெனி . இதற்கு விநோதகனின்
  சுறுசுறுப்பும் , தான் உண்டு  தன் வேலை உண்டு  என இருப்பதும் ஒரு காரணம் .
 
           வீட்டிலும் கல்யாணப் பேச்சை எடுத்தார்கள் . விமலாவும் நல்ல நேரம் பார்த்து , வலது காலை
    எடுத்து வைத்து , வினோதகன் வீட்டுக்குள்  வந்தாள், முதல் மனைவியாக .
 
                  தேனிலவுக்கு  ஏற்காடு  சென்றார்கள் . உல்லாசமாகதான்  பொழுதுகள்  கழிந்தன .
           ஆச்சு , ஒரு வருடம்  , இரண்டு வருடம்  என ஐந்து  வருடங்கள் கழிந்தன. 
                  ஆனால் , வீட்டில்  ஒரு மழலைச் சத்தம் தான்  கேட்க  முடியவில்லை .
 
               விமலாவுக்கு  வீட்டில் மரியாதை குறைய  ஆரம்பித்தது .
 
                 இத்தனைக்கும் அவள்  மாமியார் , மாமனாருக்கோ எந்த குறையும் வைக்கவில்லை. 
   கணவனிடமும்  அன்பாகத் தான் பழகினாள் . ஆண்டவன்  சோதனையோ  என்னவோ ?!
 
          டாக்டர்களிடமும்  இருவரும் சோதித்தார்கள் .  இருவரிடமும்  எந்த குறையும்  இருப்பதாகத் 
  தெரியவில்லை. 
 
           ஆனால் , கிழடுகள்  பொறுக்க வேண்டுமே !
  மெதுவாக  விநோதகனிடம்  மறு கல்யாணப் பேச்சை ஆரம்பித்தனர் , பெற்றோர் .
  உறவினர்களும்  ஆமோதித்தனர் .
 
           வி஦#183யம்  மெல்ல விமலாவின்  பெற்றோருக்கு தெரிய வந்தது . விமலா பெற்றோரிடம் 
   அழுது  புலம்பினாள் . தமது  பெண்ணின்  வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே  என கவலைப் பட்டார்கள் .
    கணவனிடம்  விமலா  வேண்டினாள், சிறிது காலம்  பொறுங்கள் -என்று .
 
       விநோதகனின் பெற்றோர்  உறவினரிடம்  எல்லாம்  சொல்லி பெண்  தேட  ஆரம்பித்தனர். 
  விநோதகனால் ஏதும் மறுக்கமுடியாத  நிலை .பெற்றோரின்  சொல்லுக்கு கட்டுப்பட்டு  வளர்ந்தவன் .
 
             அன்று இரவு  விமலாவை அணைத்தபடி  வினோதகன் ஒரு ஐடியா  கொடுத்தான் .
 
      அதாவது  விமலாவின்  தங்கை சுமதியை , வினோதகன் இரண்டாவது மனைவியாக 
 கல்யாணம் செய்வது .
 
                 ஏனென்றால்   சகோதரிகளுக்குள்  எந்த விதமான பிரச்னைகளும்  வர வாய்ப்பில்லை .
 
              சுமதிக்கும்  வரதட்சனை இல்லாமல்  கல்யாணம்  முடிந்தமாதிரி  இருக்கும் .
   சொந்தத்துக்குள்  சொந்தம் .
 
          இதற்கு ஒரு வழியாக  விமலா   சம்மதித்தாள் . 
 
             வேறு  எவளாவது ,  சக்களத்தியாக வந்தால் , தன் கணவனின் மனதை மாற்றி விட்டால் 
  தன் நிலைமை  அதோ  கதி ஆகி விடும் என நினைத்தாள். 
 
          தன் தங்கையே  சக்களத்தியாக  வந்தால்  தனக்கு கட்டுப்பட்டு  இருப்பாள்  ,  என தப்புக் 
    கணக்கு  போட்டு விட்டாள் , விமலா .
 
          விமலாவின் பெற்றோர்  சம்மதத்துடன்   ஒரு நல்ல நாளில்  வலது காலை  எடுத்து 
   வைத்து  விநோதகனின்  வீட்டுக்குள்  சுமதி வந்தாள் , இரண்டாவது  மனைவியாக !.
 
           கொஞ்ச நாட்கள்  அக்கா , தங்கை  பாசத்துடன்  குடும்பம்  நடந்தது .
 
                புது மனைவி  மோகத்தில்  , வினோதகன் சுமதி இருக்கும் அறைக்குள்  நுழைந்தால் 
  கோபத்துடன்  பொருமுவாள் , விமலா .
 
          இது  சுமதிக்கு , கொஞ்சம்  கூடப்  பிடிப்பதில்லை .  சிறிது  நாட்களில்  அக்கா , தங்கைக்குள்,
  மன்னிக்கவும் , சக்களத்திகளுக்குள்  சண்டை சச்சரவு  அதிகமாகிவிட்டது .
 
            இன்று  இரவு  ஒரு முடிவோடு தான் வினோதகன் அலுவலகத்திலிருந்து இரண்டு
   பாக்கெட்டுகளுடன்  வந்தான் .
 
                 மணி இரவு பத்து ஆகி விட்டிருந்தது .
       வீடு திறந்தே இருந்தது . மெதுவாக  விமலாவின் அறைக்குள்  நுழைந்தான் ,வினோதகன் .
 
              இவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு திரும்பி  படுத்திருந்தாள் ,விமலா .
  பக்கத்தில்  நெருங்கி அவளைத் தொட்டான் . எந்த அசைவுமில்லை.
 
          கொண்டு வந்திருந்த  ஒரு செட்  பார்சலை பக்கத்திலிருந்த மேசையில் வைத்து விட்டு
  சத்தம்  போடாமல் வெளியே  வந்து  சுமதி அறைக்குள் நுழைந்தான் .
 
         அவள் இவனை எதிர் பார்த்து  இருப்பாள் போலும் ! தொட்டவுடன் எழுந்து  அமர்ந்து
  கொண்டாள்.
 
            இவன் கையால் சுமதிக்கு அல்வா ஊட்டி விட்டான் . தலையில் பூச்சூடினான் .
  பிறகு  அவளை அனைத்துக் கொண்டான் .
 
          அந்த  சமயத்தில்  தான் கதவருகில்  விமலாவின்  விசும்பல் சத்தம்  கேட்டது .
 
            "  எனக்கு வயசாகி  விட்டது . அது தான் இளசைத் தேடித் போறிங்க . நான் பார்க்காத
  அல்வாவா ?  ஒரு நாளைக்காவது எனக்கு ஊட்டி விட்டிருப்பிங்களா ?"
 
              வினோதகன்  சப்த நாடியும் ஒடுங்கிப் போய் விட்டான் .
 
           " தெரியுதில்லே , உனக்கு வயசாகி விட்டது . பேசாமல் ஒரு மூலையில் கிடக்க
   வேண்டியது தானே ! எங்களை  ஏன் தொந்தரவு செய்கிறாய் ?"- சுமதி
 
             " ஏண்டி  சக்களத்தி !  நான் பார்த்து உனக்கு வாழ்வு கொடுத்தால்  என்னையே
   தூக்கி  எறிந்து  பேசுகிறாயே , உனக்கு என்ன தைரியமடி " -விமலா  சுமதியை
  அடிக்கப் போய் விட்டாள் .
 
            சுமதியும் பதிலுக்கு கையை  ஓங்கினாள் .
  வினோதகன் இருவருக்கும் இடையில் .
 
             சிறிது நேர சண்டைக்குப் பிறகு விமலாவும் , சுமதியும் ஓய்ந்து போனார்கள் .
 
         விடிய விடிய , தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் , வினோதகன் .
 
   " ஆமாம்! அவனுக்கு எப்போது  குழந்தை பிறக்கும் ?"
   
                            உங்களுக்குத் தெரியுமா ?